இந்தியா-சீனா இடையே 15-வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை தொடங்கியது...!


Representative image (Source: ANI)
x
Representative image (Source: ANI)
தினத்தந்தி 11 March 2022 2:16 PM IST (Updated: 11 March 2022 2:16 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா - சீனா இடையே 15-வது சுற்று பேச்சு லடாக்கில் உள்ள சுசுல் மால்டோ முனையத்தில் தொடங்கியது.

புதுடெல்லி,

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்தியா-சீன படைகளிடையே மோதல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த ராணுவ ரீதியிலான, தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தைகளால், பாங்காங் ஏரியின் வடக்கு, தெற்கு கரைகள், கல்வான், கோக்ரா ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டன.

இன்னும் சில இடங்களில் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இதுதொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ராணுவ மட்டத்திலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை லடாக்கில் உள்ள சுசுல் மால்டோ முனையத்தில் தொடங்கியது.

எல்லையில் படைகளை வாபஸ் பெறுவது குறித்து ராணுவ ரீதியிலான மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையால் பாங்காங் ஏரியில் வடக்கு தெற்கு கரைகள், கல்வான் கோக்ராவில் படை வாபஸ் பெறப்பட்டது.

Next Story