பாகிஸ்தான் வான்வழியில் அத்துமீறல்; இந்திய தூதருக்கு சம்மன்
பாகிஸ்தான் வான்வழியில் இந்தியாவை சேர்ந்த சூப்பர்சோனிக் பறக்கும் பொருள் அத்துமீறி பறந்ததற்காக இந்தியாவுக்கு அந்நாடு சம்மன் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தான் வான்வழியில், இந்தியாவை சேர்ந்த சூப்பர்சோனிக் பறக்கும் பொருள் ஒன்று அத்துமீறி பறந்துள்ளது என்று கூறி இந்தியாவுக்கு அந்நாடு சம்மன் அனுப்பி உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் சூரத்காட் பகுதியில் இருந்து கடந்த 9ந்தேதி மாலை 6.43 மணியளவில் முன்னறிவிப்பின்றி, பாகிஸ்தானின் வான்பரப்பில் இந்தியாவை சேர்ந்த சூப்பர்சோனிக் பறக்கும் பொருள் ஒன்று அத்துமீறி பறந்துள்ளது.
இது பின்னர் அதே நாளில், விபத்தில் சிக்கி பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள மியான் சன்னு நகரில் வீழ்ந்தது. இதனால், குடிமக்களின் பொருட்கள் சேதமடைந்ததுடன், பொதுமக்களின் வாழ்வுக்கும் ஆபத்து ஏற்படுத்தியுள்ளது. பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களின் விமான பாதையில் அத்துமீறி சென்று விமான விபத்தும் ஏற்படுத்தி, மக்களுக்கு பாதிப்பும் ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்து உள்ளது. எனினும், இதற்கு உடனடியாக இந்திய தரப்பில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story