கண்ணூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா, விலைவாசி கட்டுப்பாடு- கேரள பட்ஜெட்டில் தகவல்
கேரள சட்டப்பேரவையில் இன்று 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள சட்டப்பேரவையில் இன்று 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி கே.என். பால கோபால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: -
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் வெளிவட்ட சாலைக்கு ரு.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது பல்கலைக்கழகங்களில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க வேண்டும் கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பணிக்கு ரூ127 கோடி ஒதுக்கீடு. டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு ரூ26 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணூரில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.கொல்லத்தில் 5 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்க நிலம் கையகப்படுத்த ரூ. 1000 கோடி.
கேரளாவில் 5ஜி சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ரப்பர் மானியத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறைக்கு மொத்தம் ரூ.851 கோடி ஒதுக்கப்பட்டது. அணைகளில் தூர்வாருவதற்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 12 கோடி மனித நாட்கள் வேலை உருவாக்கப்படும். மனித விலங்கு மோதல்களை குறைக்க ரூ.25 கோடி. சுற்றுச்சூழல் சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.10 கோடி ஒதுக்கப்பட்ட்டுள்ளது.
Related Tags :
Next Story