பஞ்சாப் முதல் மந்திரியாக 16 ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மான்
இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
அமிர்தசரஸ்,
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. ஆட்சியமைக்க 59 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 92 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.
இந்த நிலையில், பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16-ஆம் தேதி முதல் மந்திரியாக பதவியேற்கிறார். பகத் சிங் பிறந்த ஊரான கட்கர் காலானில் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். இதற்காக நாளை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோர இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக அமிர்தசரசில் வரும் 13 ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வெற்றி கொண்டாட்ட பேரணியும் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story