கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் விவசாயிகள் வன்முறையை கையில் எடுக்கக்கூடும் - மேகாலயா கவர்னர்
கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் விவசாயிகள் வன்முறையை கையில் எடுக்கக்கூடும் என மேகாலயா கவர்னர் தெரிவித்துள்ளார்.
ஷிலோங்,
மேகாலயா மாநில கவர்னராக செயல்பட்டு வருபவர் சத்யபால் மாலிக். இவர் இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சியில் கவர்னர் சத்யபால் மாலிக் பேசியதாவது:-
டெல்லிக்கு (மத்திய அரசுக்கு) எனது அறிவுரை என்னவென்றால் விவசாயிகளுடன் மோதாதீர்கள், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். விவசாயிகள் தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவையானது பேச்சுவார்த்தை மூலம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் அதை போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வார்கள்.
போராட்டம் மூலம் பெற முடியவில்லை என்றால் அவர்கள் வன்முறை மூலம் பெற்றுக்கொள்வார்கள். விவசாயிகளை தடுக்குமுடியாது. கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என விவசாயிகளுக்கு தெரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதால் எனது பதவியை இழப்பது பற்றியும் எனக்கு கவலையில்லை’ என்றார்.
Related Tags :
Next Story