இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட அதிகமா? - மத்திய அரசு மறுப்பு


இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட அதிகமா? - மத்திய அரசு மறுப்பு
x
தினத்தந்தி 12 March 2022 1:25 AM IST (Updated: 12 March 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பலி எண்ணிக்கையை விட உண்மையிலேயே பலியானவர்கள் பல மடங்கு அதிகம் என்று சர்வதேச பத்திரிகை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் முறையாக பதிவு செய்யப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப செயல்படுகிறோம்.

எனவே, சர்வதேச பத்திரிகையில் வெளியான தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது. மக்களை திசைதிருப்ப இதை செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story