பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சை கருத்து - பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்
பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது.
இதற்கிடையில், உத்தரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அஜித் யாதவ் ஆசிரியராக செயல்பட்டு வந்தார்.
இவர் உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அரசியல் கட்சிக்கு ஆதரவாக பிரசாரங்களை மேற்கொண்டார். அப்போது, அவர் பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் அஜித் யாதவை மாவட்ட கல்வி நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story