குடிசை பகுதியில் தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்


குடிசை பகுதியில் தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம்: பிரதமர் மோடி இரங்கல்
x
தினத்தந்தி 12 March 2022 7:17 PM IST (Updated: 12 March 2022 7:17 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி குடிசைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியின் கோகுல்புரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்து அங்கிருந்து வெளியேறினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

ஏறக்குறைய 13 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த அவர்கள் பலத்த போராட்டத்திற்கு பிறகு அதிகாலை சுமார் 4 மணியளவில் தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் சுமார் 60-க்கும் மேலான குடிசைகள் எரிந்து நாசமாயின. மேலும் இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இ​ந்தச் சம்பவத்தை இதயத்தைத் உருக்குவதாக கூறிய மோடி, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.    


Next Story