கணவரின் தலையை துண்டித்து குடும்ப கோவில் முன் வைத்து சென்ற பெண்
கணவரின் தலையை துண்டித்து குடும்ப கோவில் முன் வைத்து சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அகர்டாலா,
திரிபுரா மாநிலம் ஹொவை மாவட்டம் இந்திரா காலனி கிராமத்தை சேர்ந்தவர் ரபிந்திர தண்டி (வயது 50). இவருக்கு 42 வயதில் மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
இந்நிலையில், இந்திரா காலனி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ரபிந்திர தண்டி தனது மனைவி மற்றும் மகன்களுடன் நேற்று இரவு உறக்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவு ரபிந்தர தண்டியின் மனைவி தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு கணவரை கொலை செய்தார். மேலும், கணவரின் தலையை தனியாக துண்டித்து அதை ஒரு பையில் எடுத்துக்கொண்டார்.
அப்போது, தனது தந்தையின் அலறல் சத்தம் கேட்டு இரு மகன்களும் விழித்துள்ளனர். தனது தந்தையை தாயே கொடூர ஆயுதத்தால் தாக்கியதை கண்டு அஞ்சி கூச்சல் எழுப்பினர்.
இதனால், கணவரின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்கொண்டு அந்த பெண் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறியுள்ளார். அதன்பின்னர் துண்டிக்கப்பட்ட தனது கணவனின் தலையை தங்கள் குடும்ப கோவில் முன் வைத்து சென்றுள்ளார்.
பின்னர் அந்த பெண் அங்கிருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டி அங்கேயே இருந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கணவரை கொலை செய்து தலையை துண்டித்து கோவில் முன் வைத்த பெண்ணை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் சற்று மன நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கொலை சம்பவம் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story