திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர தெப்போற்சவம்...!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று தொடங்குகிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஸ்ரீவாரி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்பம் பவனி வருகிறது.
முதல் நாள் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 3-வது நாள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர்.
4-வது நாள் 5 சுற்றுகளும், 5-வது நாள் 7 சுற்றுகளும் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வருகின்றனர்.
இதனால் ஏழுமலையான் கோவிலில் இன்று, நாளை மற்றும் 15, 16, 17-ந்தேதிகளில் கோவிலில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story