அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 March 2022 11:05 AM IST (Updated: 13 March 2022 11:05 AM IST)
t-max-icont-min-icon

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கு-வடகிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற புள்ளிக் கணக்கில் இன்று காலை 8.58 மணிக்கு அந்தமான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கு-வடகிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை. அதேபோல பொருள் தேசம் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

Next Story