உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்...!
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்கள் பலரும் பலியாகி உள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உக்ரைன் நெருக்கடி குறித்த உயர்மட்டக் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் , வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் உக்ரைன் போர் சூழலால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும், முப்படைகளின் தயார் நிலை குறித்தும் பிரதமர் மோடி ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story