பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும் - உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
உக்ரைனில் நிலவி வரும் மோதல் காரணமாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் , வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார்.
மேலும் உக்ரைனில் உயிரிழந்த மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளார்.
Related Tags :
Next Story