பஞ்சாபில் பகவந்த் மன் , அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பேரணி : தொண்டர்கள் உற்சாகம்


பஞ்சாபில் பகவந்த் மன் , அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பேரணி :  தொண்டர்கள் உற்சாகம்
x
தினத்தந்தி 13 March 2022 4:03 PM IST (Updated: 13 March 2022 4:03 PM IST)
t-max-icont-min-icon

பஞ்சாபில் ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.


அமிர்தசரஸ்,

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப்பை ஆம் ஆத்மியும், மீதமுள்ள 4 மாநிலங்களை பா.ஜனதாவும் கைப்பற்றின.

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று  ஆம் ஆத்மி பஞ்சாபில் முதல் முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது.

இதன்படி பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16-ஆம் தேதி அம்மாநில முதல் மந்திரியாக பதவியேற்கிறார். 

இந்நிலையில்  பஞ்சாப் அமிர்தசரசில் பகவந்த் மன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றி பேரணி நடத்தி வருகின்றனர் .


Next Story