மத்திய பிரதேசத்தில் மதுக்கடை மீது கல் எறிந்த உமா பாரதி அவரே வீடியோ வெளியிட்டார்


மத்திய பிரதேசத்தில் மதுக்கடை மீது கல் எறிந்த உமா பாரதி அவரே வீடியோ வெளியிட்டார்
x
தினத்தந்தி 14 March 2022 4:36 AM IST (Updated: 14 March 2022 4:36 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பர்கேரா பதானி பகுதியில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் மதுக்கடைகள் உள்ளன.

போபால், 

மத்திய பிரதேச தலைநகர் போபாலின் பர்கேரா பதானி பகுதியில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான உமா பாரதி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

ஆனால் இதை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. எனவே நேற்று தனது ஆதரவாளர்களுடன் அங்கு அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதில் மதுக்கடையை போராட்டக்காரர்கள் தாக்கினர். அப்போது உமா பாரதியும் மதுக்கடை மீது கல் எறிந்தார். இந்த வீடியோவை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அந்த பகுதியில் கோவில், பள்ளிக்கூடம் இருப்பதால் மதுக்கடைகளை மூடுமாறு விடுத்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை என அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

உமா பாரதியின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

Next Story