ஆந்திர சட்டப்பேரவையில் அமளி: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 5-பேர் சஸ்பெண்ட்


ஆந்திர சட்டப்பேரவையில் அமளி: தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 5-பேர் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 14 March 2022 5:13 PM IST (Updated: 14 March 2022 5:13 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநில சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

அமராவதி,

ஆந்திர மாநில சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் வரும் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியதும்,  ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்த  விவகாரம்  தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தக்கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்,வழக்கமான அலுவல்களை தொடர்ந்தார். இதை  ஏற்க மறுத்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போதும் தெலுங்கு தெசம் கட்சி எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் அட்சன்னைடு, நிம்மலா ராம்நாயுடு, கோரண்டலா புட்சையா சவுத்ரி, பய்யவுலா கேஷவ், டிபிவி ஸ்வாமி ஆகியோர் சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளியேற மறுத்து அமளியில் ஈடுபட்டதால், அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். 

இதனிடையே, சஸ்பெண்ட் செய்யப்படாத எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவைக்காவலர்களுக்கும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் ஏற்பட்டது.  

Next Story