பாலக்காடு: வீடுகளில் உள்ள கிணறுகளில் தீப்பிழம்பு - பொதுமக்கள் அதிர்ச்சி..!
பாலக்காட்டில் உள்ள வீடுகளின் கிணறுகளில் மர்மான முறையில் தீப்பிடித்து எரிவது குறித்து அரசு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கேரளா,
பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதியில் உள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட கிணறுகளில் இந்த மாதிரி தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில கிணறுகளில் பெட்ரோல் வாசம் அடிக்கிறது. ஒரு சில கிணறுகளில் மினரல் வாட்டரின் அம்சம் உள்ளது என கூறப்படுகிறது. அதேநேரத்தில் அதிகாரிகள் இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இருந்து கிணறுகளில் பெட்ரோல் கலந்து இருக்கலாம், அதன் மூலமும் தீப்பிடித்து எரிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்கள்.
பாலக்காடு மாவட்டத்தில் கேரளாவிலேயே மிக அதிகமாக வெயில் கொடுமை அதிகரித்து உள்ளது. வெயில் கொடுமையால் ஏற்பட்ட சூட்டின் விளைவாய் தீ பிடித்து இருக்குமா எனவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்மையான காரணம் என்ன என்று இதுவரை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கிணற்றில் தீ எறிவதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.
Related Tags :
Next Story