மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் - திமுக எம்.பி. கனிமொழி பேச்சு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 15 March 2022 2:26 PM IST (Updated: 15 March 2022 2:27 PM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

புதுடெல்லி,

மக்களவையில் இன்று ரெயில்வே துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். கொரோனா காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த கோச்கள் நீக்கப்பட்டது.

தெற்கு ரெயில்வேக்கு ரூ.59 கோடி மட்டும், வடக்கு ரெயில்வேக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு என்று எப்போதும் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக் கூடாது”என்றார். 

Next Story