தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கோவா காங்கிரஸ் தலைவர் ராஜினாமா
கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
பனாஜி,
கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான அதிருப்தியின் காரணமாக காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருதப்பட்டது. ஆனால், அக்கட்சி 11 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான கோவா முன்னிலை கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றன.
அதைத் தொடர்ந்து, தேர்தலில் காங்கிரசின் பின்னடைவுக்கு மாநில தலைவர் கிரிஷ் சோடங்கரின் செயல்பாடுதான் காரணம் என்ற விமர்சனம் எழுந்தது. அவரை கட்சியை விட்டே நீக்க வேண்டும் என்று மாநில தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பு ஏற்று மாநில தலைவர் பதவியில் இருந்து சோடங்கர் நேற்று ராஜினாமா செய்தார்.
அதற்கான கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அவர் அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story