அசாம்: அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பார்க்க அரை நாள் சிறப்பு விடுமுறை...!
அசாமில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இந்தி திரைப்படத்தை பார்ப்பவர்களுக்கு நாளை ஒரு நாள் அரை நாள் விடுமுறை அளித்து அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கவுகாத்தி,
விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இந்தி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி இருக்கிறது.
காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டதை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு பா.ஜ.க. ஆளும் அரியானா, குஜராத், கர்நாடகா மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் இயக்குனர் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்திலும் படத்துக்கு வரிவிலக்கு வழங்குவதாக முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் மத்தியபிரதேச போலீசார் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்ப்பதற்கு தாங்கள் விரும்பும் நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று அம்மாநில உள்ளாட்சித் துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா நேற்று அறிவித்தார்.
இந்தநிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பதிவில்,
மாநில அரசு ஊழியர்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க நாளை அரை நாள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது. "அவர்கள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தாங்கள் படம் பார்க்க செல்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டும் மற்றும் மறுநாள் டிக்கெட்டுகளை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story