‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட மத்திய மந்திரி...!


‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட மத்திய மந்திரி...!
x
தினத்தந்தி 16 March 2022 1:14 PM IST (Updated: 16 March 2022 1:14 PM IST)
t-max-icont-min-icon

மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து மந்திரி கிரிராஜ் சிங், 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீருடன் தியேட்டரில் இருந்து வெளியே வந்துள்ளார்.

புதுடெல்லி,

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”. 

இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது. 

இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் வெளியேறியதை சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்ததற்காக இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும் இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களும் இந்த படத்திற்கு பல்வேறு வரிச்சலுகைகளை வழங்கி வருகிறது. 

இந்நிலையில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பஞ்சாயத்து மந்திரி கிரிராஜ் சிங், 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்' படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீருடன் தியேட்டரில் இருந்து வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

காஷ்மீரில் இருந்து இந்துக்கள் வெளியேற்ற காட்சியை பார்த்து அழுதேன். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் வெளி வராமல் இருந்திருந்தால், மக்கள் உண்மையை அறிந்திருக்க மாட்டார்கள். நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் இந்த படம் திரையிடப்பட வேண்டும்' என்று கூறினார்.

Next Story