"தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு நாடு முழுவதும் வரிச்சலுகை வழங்க வேண்டும்- சத்தீஸ்கர் முதல்-மந்திரி
மத்திய அரசு "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்திற்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூர்,
விவேக் ரஞ்சன் அக்னி ஹோத்ரி இயக்கத்தில் பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் பல முக்கிய பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.
கடந்த 11-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் நாடு முழுவதும் பல தரப்பினர் இடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.
இந்த படத்திற்கு அரியானா, மத்திய பிரதேசம், திரிபுரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரிச்சலுகை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்திலும் இது தொடர்பாக இன்று விவாதம் நடந்தது. கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தரம்லால் கௌசிக் (பாஜக), சத்தீஸ்கரில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அந்த முதல்- மந்திரி பூபேஷ் பாகேல் கூறும் போது, " சத்தீஸ்கரில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வசூலிக்கப்படும் வரியில் இந்திய அரசுக்கும் பங்கு கிடைக்கும்.
எனவே நாடு முழுவதும் மத்திய அரசு இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதன் பாதி பங்கு மத்திய அரசுக்கு தான் செல்கிறது" என தெரிவித்தார்.
Related Tags :
Next Story