வீடு இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபருக்கு சுவிஸ் வங்கியில் ரூ.30 ஆயிரம் கோடி இருப்பு..!


Image courtesy: AFP
x
Image courtesy: AFP
தினத்தந்தி 16 March 2022 6:14 PM IST (Updated: 16 March 2022 6:14 PM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் தெருவில் வசிக்கும் ஒருவரது பெயரில் சுவிஸ் வங்கியில் ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக வெளியான செய்தியைக் கேட்டு அவரே அதிர்ச்சியடைந்துள்ளார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானிலுள்ள குல்பர்க் லாகூர் என்ற இடத்தில், சாக்கடைகள் ஓடும் பகுதியில் வாழ்ந்து வருகிறார் ஜாவேத். அந்த சேரிப்பகுதியில் அவர் வாழ்ந்த வீட்டைக்கூட அரசு இடித்துவிட, தன் தாயுடன் அதே இடத்தில் ஒரு கூரையின் கீழ் வாழ்கிறார்.

அவரின் பெயரில் பிரபல சுவிஸ் வங்கியான கிரெடிட் சூயிஸ் வங்கியில் இரண்டு வங்கிக்கணக்குகள் உள்ளன. ஆனால், ஜாவேதுக்கு பாகிஸ்தானில் எந்த வங்கிக் கணக்கும் கிடையாது, அவர் இதுவரை பாகிஸ்தானை விட்டு வெளியேறி எந்த வெளிநாட்டுக்கும் சென்றதும் கிடையாது.

ஆனால், 2003ஆம் ஆண்டு, அவரது 26 வயதில், அவர் பெயரில் கிரெடிட் சூயிஸ் வங்கியில் ஒரு கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு பாஸ்போர்ட் கூட கிடையாது. அதன் பின் 2005ஆம் ஆண்டு பாஸ்போர்ட் ஒன்றிற்கு விண்ணப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார். ஆனால், அவர் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிப்பதற்கு முன், மீண்டும் அவர் பெயரில் அந்த வங்கியில் இரண்டாவது கணக்குத் துவங்கப்பட்டுள்ளது.

ஜாவேதின் வங்கிக்கணக்குகளில்  ரூ.30 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளன.

அதாவது, யாரோ ஒருவர் ஜாவேத் பெயரில் கணக்குகள் துவங்கி பணத்தை போட்டுவந்துள்ளார். ஜேர்மன் செய்தித்தாள் ஒன்று இந்த தகவலை வெளியிட்டதையடுத்து விசாரணைகள் துவங்க, இரண்டு கணக்குகளும் 2006ஆம் ஆண்டு மூடப்பட்டுள்ளன.

தன் பெயரில் இவ்வளவு பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டிருக்கும் செய்தி கேட்டு ஜாவேத் அதிர்ச்சியடைந்துள்ளார். அவரது தாயாகிய பர்வீன் அக்தரோ, ஜாவேதுக்கு சாப்பட்டுக்கே வழியில்லை, இதில் அவனது மனைவி வேறு கர்ப்பமாக இருக்கிறாள். அவளுக்கான செலவுகளையே ஜாவேதின் மாமனார் வீட்டில்தான் கவனித்துக்கொள்கிறார்கள்.  

அப்படி எங்களுக்கு அவ்வளவு பணம் இருந்தால், நாங்களும் அவர்களைப் போல பெரிய மாளிகையில் வாழமாட்டோமா என தூரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் வீட்டைக் காட்டுகிறார் பர்வீன்.

1977ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பிறந்தவர் ஜாவேத். அந்த நாளில் முகமது ஜாவேத் என்ற பெயரில் பிறந்தவர் இவர் மட்டும்தான். அத்துடன், சுவிஸ் வங்கியில் கணக்குத் துவக்க பாஸ்போர்ட் தேவை. ஆனால், ஜாவேத் பாஸ்போர்ட் எடுப்பதற்கு முன்பே சுவிஸ் வங்கியில் இரண்டு கணக்குகளும் துவக்கப்பட்டுவிட்டன. அப்படியிருக்க, அவரது அடையாளங்கள் எப்படி திருடப்பட்டன என்பது மர்மமாகவே நீடிக்கிறது.  


Next Story