யுபிஐ பணப் பரிவர்த்தனையில் கால்பதிக்கும் டாடா நிறுவனம்..!!


Image courtesy: AFP
x
Image courtesy: AFP
தினத்தந்தி 16 March 2022 7:15 PM IST (Updated: 16 March 2022 7:15 PM IST)
t-max-icont-min-icon

உப்பு முதல் விமானம் வரை பல பொருள்களை உற்பத்தி செய்து வரும் டாடா நிறுவனம் தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை துறையிலும் அறிமுகமாகிறது.

மும்பை,

ஆன்லைன் (யுபிஐ) பணப் பரிவர்த்தனை அறிமுகமான கடந்த சில ஆண்டுகளிலேயே  வரலாறு காணாத வளர்ச்சியை மக்களிடம் பெற்றது. குறிப்பாக கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்த பணபரிவர்தனைகளை பொருத்தவரை போன் பே மற்றும் கூகுள் பே செயலிகள் தான் அதிகம் உபயோக்கிப்படுகிறது.

இந்த நிலையில் இந்த செயலிகளுக்கு போட்டியாக தற்போது டாடா குழுமம் தனது சொந்த செயலியோடு களமிறங்க உள்ளது. உப்பு முதல் விமானம்  வரை பல பொருள்களை உற்பத்தி செய்து வரும் டாடா நிறுவனம் தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை துறையிலும் அறிமுகமாகிறது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் தற்போது தேசிய பரிவர்த்தனை நிறுவனத்தின் அனுமதிக்காக காத்திருக்கிறது.

அந்த நிறுவனத்தின் அனுமதி கிடைத்தவுடன் இந்த செயலியானது அடுத்த மாதம் வெளியாகலாம் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை போட்டியில் டாடா இணைய  உள்ளதால் இந்த சந்தையில் வெகுவாக மாற்றம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Next Story