புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள்; முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் - பியூஷ் கோயல்


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள்; முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் - பியூஷ் கோயல்
x
தினத்தந்தி 16 March 2022 8:35 PM IST (Updated: 16 March 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்கள் உள்ளிட்ட செலவை முழுவதுமாக மத்திய அரசே ஏற்கும் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் குறித்து பேசிய கனிமொழி எம்.பி., புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வழங்கப்பட்டால் அதற்கான செலவை யார் ஏற்பார்கள் என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி பியூஷ் கோயல், உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் விலைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை விட கூடுதல் பொருட்களை வழங்கினால் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தானியங்களுக்கான சேமிப்புக் கிடங்கு, மானியம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் முழுமையாக மத்திய ஏற்கும் எனவும் அவர் தெரிவித்தார். 

Next Story