சீருடை விதிகள் தொடர்பான பொதுநல மனுவை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
சீருடை விதிகளை அமல்படுத்துவது தொடர்பான பொதுநலமனுவை விரைந்து விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
புதுடெல்லி,
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கல்வி நிலையங்களில் சீருடை விதிகளை அமல்படுத்தும் நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, நிகில் உபாத்யாய் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலமனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ரிட் மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் அவரது தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை அவசரமாக விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story