ஜி-23 காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் நாளை சோனியா காந்தியை சந்திக்க முடிவு


ஜி-23 காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் நாளை சோனியா காந்தியை சந்திக்க முடிவு
x
தினத்தந்தி 16 March 2022 11:19 PM IST (Updated: 16 March 2022 11:19 PM IST)
t-max-icont-min-icon

ஜி-23 காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் நாளை (17 ம் தேதி) சோனியா மற்றும் ராகுலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், அந்த 5 மாநில கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக்கொண்டிருந்தார். இதற்கிடையே ஜி-23 என்ற காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.  மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் டெல்லி இல்லத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.  இதில் கபில்சிபல், ஆனந்த்ஷர்மா, பூபிந்தர்சிங் ஹூடா, மணீஷ் திவாரி, சசிதரூர், ராஜ்பாப்பர், சந்தீப் திக் ஷீத் , அம்பிகா சோனி, உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். 

கட்சி தலைமை விவகாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், நாளை (17 ம் தேதி) காங்., தலைவர் சோனியா மற்றும் ராகுலை சந்திப்பது என முடி வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story