ஆசியா, ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா: கூடுதல் உஷாராக இருக்கும்படி மத்திய மந்திரி அறிவுறுத்தல்
ஆசியா, ஐரோப்பாவில் அதிகரிக்கும் கொரோனா, மரபணு வகைப்படுத்தலை தீவிரமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.
புதுடெல்லி,
சில தென்கிழக்காசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில், மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையிலான உயர்மட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், வருகிற 27-ந் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ள சூழலில், கொரோனா தடுப்பூசி நிலை, கொரோனா மரபணு கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதிக உஷார்நிலை, கண்காணிப்புக்கும், மரபணு வகைப்படுத்தலை தீவிரமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.
இந்த உயர்மட்ட கூட்டத்தில், மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண், உயிர்தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, மருந்தியல் துறை செயலாளர் எஸ்.அபர்ணா, நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக (ஐ.சி.எம்.ஆர்.) தலைமை இயக்குனர் டாக்டர் பல்ராம் பார்கவா, எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, தேசிய தடுப்பூசி திட்ட தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா உள்ளிட்ட அரசு மூத்த அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story