திருமண ஆசைகாட்டி கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கற்பழிப்பு... பிரபல நடிகரின் சகோதரர் மீது வழக்குப்பதிவு
பெங்களூருவில் திருமண ஆசைகாட்டி கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கற்பழிக்கப்பட்டார். இதுதொடர்பாக பிரபல நடிகரின் சகோதரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு நகரில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான அவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர், ஒரு தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த திருமண தகவல் மையம் மூலம், இளம்பெண்ணுக்கும், கன்னட திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவரின் சகோதரருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு, 2 பேரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்துள்ளனர். தான் பிரபல தொழில் அதிபர் என்றும், தனது சகோதரர் பிரபல சினிமா நடிகர் என்றும் இளம்பெண்ணிடம் அந்த நபர் கூறி இருந்தார். இதையடுத்து, அந்த நபரின் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த செல்போன், மடிக்கணினியை இளம்பெண் பரிசாக வழங்கியதாக தெரிகிறது.
அதன்பிறகு, அந்த நபரும் இளம்பெண்ணும் ஜெயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது. அங்கு வைத்து இளம்பெண்ணை அந்த நபர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த இளம்பெண் பசவனகுடி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், திருமண ஆசைகாட்டி தன்னை நடிகரின் சகோதரர் கற்பழித்து விட்டதாக கூறி இருந்தார். அதன்பேரில், அந்த நடிகரின் சகோதரர் மீது பசவனகுடி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ஹரீஷ் பாண்டே நிருபர்களிடம் கூறுகையில், ‘இளம்பெண் கொடுத்த கற்பழிப்பு புகாரின் பேரில் நடிகரின் சகோதரர் கீர்த்தி சந்திரா மீது வழக்குப்பதிவாகி இருக்கிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.
Related Tags :
Next Story