நிலக்கரி வழக்கு: மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்


நிலக்கரி வழக்கு: மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
x
தினத்தந்தி 17 March 2022 4:16 PM IST (Updated: 17 March 2022 4:16 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கரி வழக்கு தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் மருமகனும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அபிசேக் பானர்ஜி மீது நிலக்கரி வாங்குவதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் மேற்கு வங்கத்தில் நிலக்கரி கடத்தல் வழக்கில், நிலக்கரி கடத்தில் செய்த கொள்ளையர்களிடம் இருந்து, மம்தா பானர்ஜியுடன் மருமகன் அபிசேக் பானர்ஜி மற்றும், அவரது மனைவி  ருஜிராவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜியும் அவரது மனைவி ருஜிராவும் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் இயக்குனரக அலுவலகத்தில் அடுத்த வாரம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Next Story