பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் ஓய்வூதியம் பெற மறுப்பு
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
சண்டிகார்,
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் கட்சிகள் தோல்வி அடைந்தன.
இதில் சிரோமணி அகாலிதளம் கட்சித்தலைவரும், 5 முறை பஞ்சாப் முதல்-மந்திரியாக இருந்தவருமான பிரகாஷ் சிங் பாதல் தொடர்ந்து, தான் 5 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற லம்பி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதற்கிடையே அவர், முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியம் பெற மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘முன்னாள் எம்.எல்.ஏ. என்ற முறையில் எனக்கு அரசு வழங்கும் ஓய்வூதியம் வேண்டாம். அந்த தொகையை மக்கள் பணிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் அரசையும், சபாநாயகரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக தனியாக கடிதம் ஒன்றையும் அவர் அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story