பங்குனி திருவிழா: பம்பையில் அய்யப்பனுக்கு இன்று ஆராட்டு நிகழ்ச்சி...!


பங்குனி திருவிழா: பம்பையில் அய்யப்பனுக்கு இன்று ஆராட்டு நிகழ்ச்சி...!
x
தினத்தந்தி 18 March 2022 8:56 AM IST (Updated: 18 March 2022 8:56 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலையில் பங்குனி திருவிழாவையொட்டி பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

திருவனந்தபுரம், 

பங்குனி மாத சிறப்பு பூஜை மற்றும் 10 நாட்கள் நடைபெறும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 8-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். 

இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பிறகு மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். 19-ந் தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படும்.

தற்போது முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசன வசதி செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Next Story