தோனி விவசாய பண்ணையை பொது மக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு திறப்பு


தோனி விவசாய பண்ணையை பொது மக்கள் பார்வையிட 3 நாட்களுக்கு திறப்பு
x
தினத்தந்தி 18 March 2022 6:39 AM GMT (Updated: 2022-03-18T12:09:13+05:30)

ஹோலியை முன்னிட்டு தோனியின் விவசாய பண்ணை 3 நாட்களுக்கு பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டு உள்ளன.ராஞ்சி,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி.  ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் ஈஜா என்ற பெயரில் விவசாய பண்ணை ஒன்று இவருக்கு உள்ளது.  இந்த நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு பார்வையாளர்களுக்காக 3 நாட்களுக்கு இந்த விவசாய பண்ணை திறக்கப்படுகிறது.

இதுபற்றி தோனியின் வேளாண் ஆலோசகர் ராஷன் குமார் கூறும்போது, ஹோலியை முன்னிட்டு பொதுமக்கள் பார்வைக்காக இந்த பண்ணையை 3 நாட்களுக்கு திறக்க முடிவு செய்துள்ளோம்.  விவசாயம் எப்படி நடைபெறுகிறது என்று மக்கள் கண்டு, அறிந்து கொள்ள முடியும்.  இதனால், விவசாயம் பற்றிய அறிவை பரப்பவும் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

43 ஏக்கரில் பரந்துள்ள இந்த பண்ணையில், டிராகன் பழம், தண்ணீர் பழம், முலாம் பழம், பட்டாணி, பச்சை மிளகாய் மற்றும் காய்கறி, வசந்த காலத்தில் விளைய கூடிய ஸ்டிராபெர்ரி ஆகியவை பயிரிடப்பட்டு வருகின்றன.

இதில், ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  இதனால், வேளாண் தொடர்புடைய அனைத்து பொருட்களும் கிடைக்கும்.  3 நாட்களும் பார்வையிட வரும் மக்கள் பண்ணையில் இருந்து நேரடியாக பசுமையான காய்கறிகளை, அவர்களே பறித்து, எடுத்து செல்லலாம்.

பொதுமக்களை வாங்குவதற்கு ஊக்கப்படுத்தும் வகையில், ஒரு ஸ்டிராபெர்ரி பழப்பெட்டியை விலைக்கு வாங்குபவர்களுக்கு மற்றொரு ஸ்டிராபெர்ரி பழப்பெட்டி இலவசம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story