சிறுமிக்கு 5 வருடங்களாக தாத்தா, தந்தை, சகோதரர், மாமா பாலியல் வன்கொடுமை


சிறுமிக்கு 5 வருடங்களாக தாத்தா, தந்தை, சகோதரர், மாமா பாலியல் வன்கொடுமை
x
தினத்தந்தி 19 March 2022 5:03 PM IST (Updated: 19 March 2022 5:03 PM IST)
t-max-icont-min-icon

5 வருடங்களாக தாத்தா, தந்தை, சகோதரர், மாமா ஆகியோரிடம் பாலியல் வன்கொடுமையை சிறுமி குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு

புனே

பீகாரை சேர்ந்த  ஒரு குடும்பம்  மராட்டிய மாநிலம் புனேவில் வசித்து வந்தது. இந்த குடும்பத்தை சேர்ந்த 11 வயது சிறுமியை தந்தை, சகோதரர் மற்று தாத்தா, மாமா ஆகியோர் பாலியல் வன் கொடுமை செய்து உள்ளனர்.

"அந்தப் பெண் தனது பள்ளி கூடத்தில்  'நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல்' என்ற கவுன்சிலிங்கின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறுமி பாலியல் வன்கொடுமையை சந்தித்து வருகிறார்.இவர்கள் மீது போலீசார்  வழக்குபதிவு செய்து உள்ளனர். யாரும் கைது செய்யப்படவில்ல்லை.

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அஷ்வினி சத்புதே கூறியதாவது:

2017 ஆம் ஆண்டு பீகாரில் வசிக்கும் போது தந்தையே (45) சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கி உள்ளார்.

"பெண்ணின் மூத்த சகோதரர்(25) நவம்பர் 2020 இல் சிறுமையை  பாலியல் வன்கொடுமை செய்யத் தொடங்கினார். அவரது தாத்தாவும்( 60) ,மாமாவும் அவளை தகாத முறையில் தொடுவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.

அனைத்து சம்பவங்களும் தனித்தனியாக நடந்ததாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் செயல்களை அறிந்திருக்காததாலும், இது கூட்டு பலாத்கார வழக்கு அல்ல என கூறினார்.

Next Story