அந்தமான் கடற்பகுதியில் நாளை உருவாகிறது அசானி புயல்..!!
காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
போர்ட் பிளேயர்,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு "அசானி" என பெயரிடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருவதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் அந்தமான் நிக்கோபா் பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளன. எனவே அந்தமான், நிக்கோபாா் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறு அந்தமானின் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story