போலீஸ் காவலில் வாலிபர் மரணம்; ஆத்திரத்தில் கான்ஸ்டபிளை அடித்தே கொன்ற கிராமவாசிகள்


போலீஸ் காவலில் வாலிபர் மரணம்; ஆத்திரத்தில் கான்ஸ்டபிளை அடித்தே கொன்ற கிராமவாசிகள்
x
தினத்தந்தி 20 March 2022 11:28 AM IST (Updated: 20 March 2022 11:28 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் போலீஸ் காவலில் மரணம் அடைந்த ஆத்திரத்தில் கிராமவாசிகள் ஒன்று கூடி கான்ஸ்டபிளை அடித்தே கொன்றுள்ளனர்.



பாட்னா,



பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் அமைந்துள்ளது பால்தர் காவல் நிலையம்.  இதில் போலீஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தவர் ராஜ் மங்கள் ராய்.  இந்த நிலையில், ஆர்யா நகர் பகுதியை சேர்ந்த அமிர்த யாதவ் (வயது 30) என்பவரை தடைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக விசாரணை நடத்த வேண்டும் என கூறி போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.

இதில், திடீரென அந்நபர் உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கும்பலாக கட்டைகளையும், இரும்பு தடிகளையும் எடுத்து கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர்.  போலீசார் மீதும் தாக்குதலை நடத்தி உள்ளனர்.  இதில், காயமடைந்த 4 போலீசார் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.  இதில், சிகிச்சை பலனின்றி ராய் உயிரிழந்து உள்ளார்.

இதன்பின் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தேனீ கடித்து உயிரிழந்து உள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என சப்டிவிசனல் மாஜிஸ்திரேட் தனஞ்செய குமார் கூறியுள்ளார்.


Next Story