பீகாரில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு
பீகாரில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாட்னா,
பீகாரில் கடந்த 6 ஆண்டுகளாக பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அங்கு கள்ளச்சந்தையில் போலி மதுபானங்கள் விற்கப்படுகின்றன. குறிப்பாக பண்டிகை காலங்களில் போலி மதுபானங்களில் விற்பனை அமோக இருந்து வருகிறது.
இந்நிலையில் பீகாரின் மாதேபுரா, பாகல்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் ஹோலி பண்டிகையின்போது கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட விஷச்சாராயத்தை ஏராளமானோர் வாங்கி குடித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 14 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விஷச்சாராயம் குடித்த பலர் கண் பார்வையை இழந்துள்ளனர்.
Related Tags :
Next Story