கேரளாவில் மின்தடை ஏற்படாது - மந்திரி தகவல்
கேரளாவில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.
பாலக்காடு,
கேரள மின்சாரத்துறை மந்திரியும், சித்தூர் தொகுதி எம்.எல்.ஏ.யுமான கே.கிருஷ்ணன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரளாவில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அத்துடன் அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது. குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு தற்போது அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும் கேரளத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் தற்போது தேவையான தண்ணீர் இருக்கிறது. இதனால் அணைகளில் இருந்து மின்உற்பத்தி செய்ய முடியும். எனவே கேரளாவில் இந்த ஆண்டு கட்டாயம் மின்தடை ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சாரத்தை பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருப்பதால் பகலில் மின்சார தேவையும் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story