சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார்; 4 பேர் உயிரிழப்பு


சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார்; 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 March 2022 8:02 AM IST (Updated: 21 March 2022 8:02 AM IST)
t-max-icont-min-icon

சீனாவின் வடக்கே பொதுமக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகினர்.



பீஜிங்,


சீனாவின் வடக்கே ஹெபய் மாகாணத்தில் ஹண்டன் நகரில் சாலை ஒன்றில் பொதுமக்கள் திரளாக சென்று கொண்டிருந்தனர்.  அவர்களில் பலர் சைக்கிள்களில் பயணம் செய்தபடி இருந்தனர்.

இந்த நிலையில், திடீரென வந்த செடான் வகை கார் ஒன்று அந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து பலர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.  இதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.  அவசர சிகிச்சை அளித்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை.  14 பேர் காயமடைந்து உள்ளனர்.

இந்த விபத்தில் கார் ஓட்டுனரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் ஏற்பட்டதற்கான காரணம் பற்றி அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story