பண்ணைக்கு சென்ற சிறுமிக்கு மதுபானம் குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை; கும்பல் கைது


பண்ணைக்கு சென்ற சிறுமிக்கு மதுபானம் குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை; கும்பல் கைது
x
தினத்தந்தி 21 March 2022 10:17 AM IST (Updated: 21 March 2022 10:17 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் பண்ணைக்கு சென்ற 17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்து 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளது.




கட்ச்,



குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பூஜ் நகரில் பூஜியா என்ற பகுதியில் மலையடிவாரத்தில் பண்ணை ஒன்று உள்ளது.  இந்த பண்ணைக்கு தனது நண்பருடன் 17 வயது சிறுமி சென்றுள்ளார்.  அந்த பகுதியில் இருந்த 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்தது.  இதன்பின், கும்பலாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த பின்பு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.  மயக்கமடைந்து கிடந்த சிறுமியை அக்கம்பக்கத்தில் இருந்த உள்ளூர்வாசிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.  போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி கட்ச் மாவட்ட எஸ்.பி. சவுரப் சிங் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சம்பவம் பற்றி சிங் கூறும்போது, பண்ணை பகுதிக்கு தனது நண்பருடன் சிறுமி சென்றுள்ளார்.  அந்த பகுதியில் இருந்த 4 பேர் அவரை கவனித்து உள்ளனர்.  பின்பு சிறுமியை தொடர்ந்து சென்ற கும்பல், சிறுமியை கட்டாயப்படுத்தி மதுபானம் குடிக்க வைத்தனர்.

இதன்பின், சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.  அவர்களில் ஒருவரை சிறுமிக்கு நினைவு உள்ளது.  அதன்பின் மதுபானம் குடித்ததில் மயக்கமடைந்து உள்ளார்.  இந்த வழக்கில், 2வது நபரும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட உண்மையை ஒப்பு கொண்டுள்ளார்.  மற்ற 2 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.  மருத்துவ அறிக்கைகள் வெளிவந்த பின்னரே அது தெரிய வரும் என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் கடத்தல், நஞ்சு கொடுத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story