இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 181.24 -கோடியை தாண்டியது


இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 181.24 -கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 21 March 2022 2:46 PM IST (Updated: 21 March 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 181.24 கோடியைக் கடந்தது.

புதுடெல்லி,

இந்தியாவில் இதுவரை 181.24 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்70,49,779 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து  இதுவரை மொத்தம் 1,81,24,97,303-தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25,106 ஆக குறைந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.74% ஆக உள்ளது. வாராந்திர தொற்று விகிதம் தற்போது 0.40% ஆக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.40 சதவீதமாக பதிவாகியுள்ளது. 


Next Story