‘தி காஷ்மீர் பைல்ஸ்’திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்க்க வேண்டும் - அமீர்கான்


‘தி காஷ்மீர் பைல்ஸ்’திரைப்படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்க்க வேண்டும் - அமீர்கான்
x
தினத்தந்தி 21 March 2022 3:16 PM IST (Updated: 21 March 2022 3:16 PM IST)
t-max-icont-min-icon

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை,

பிரபல இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படம் வெளீளி இதில் அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து உள்ளனர். 

இந்த படம் 1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட பண்டிட்களின் உண்மைக் கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

 இருப்பினும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

​​சர்ச்சைக்கு  பெயர் பெற்ற டைரக்டர் ராம் கோபால் வர்மா, படத்தை வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை நிச்சயமாகப்  பார்ப்பேன். இதன் கதை நமது வரலாற்றைப் பேசியுள்ளது. 

காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்தது மிகவும் வருந்தத்தக்கது. இது மாதிரியான தலைப்புகளில் வெளிவருகின்ற படத்தை ஒவ்வொரு இந்தியரும் அவசியம் பார்க்க வேண்டும். இந்தப் படம் மனிதத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவர் மனதையும் மிகவும் ஆழமாக தொட்டுள்ளது. அதனால் நான் நிச்சயம் பார்ப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Next Story