கேரளாவில் மேலும் 495- பேருக்கு கொரோனா தொற்று
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 15,561- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 495- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றில் இருந்து மேலும் 850- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,433- ஆக குறைந்துள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 54 ஆயிரத்து 022- ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 15,561- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 67,363 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் அதிகபட்சமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 117- பேருக்கும் திருவனந்தபுரத்தில் 79 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் 68 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story