கொரோனா பரவல்: இந்தியாவில் கல்விப்பணி கடுமையாக பாதிப்பு - மத்திய மந்திரி தகவல்


கொரோனா பரவல்: இந்தியாவில் கல்விப்பணி கடுமையாக பாதிப்பு - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 22 March 2022 12:22 AM IST (Updated: 22 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் கல்விப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியதாவது:-

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் உலகம் முழுவதும் கல்விப்பணி பாதிக்கப்பட்டது. இந்தியாவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் படிப்பு தொடர வேண்டும் என்பதால், ஆன்லைன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

‘சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் படிக்கும் சிறப்பு குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் கல்விச்செலவுக்காக மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story