புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி 44 சதவீதம் நிறைவு - மத்திய அரசு தகவல்
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று வீட்டு வசதி துறை இணை மந்திரி கவுஷல் கிஷோர் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் கூறுகையில், ‘டெல்லியில் நடந்து வரும் புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் 44 சதவீதம் முடிந்து விட்டன. இதற்காக ரூ.480 கோடி இதுவரை செலவிடப்பட்டு உள்ளது. புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட மத்திய விஸ்டா திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.1,423 கோடி செலவிடப்படும். அடுத்த நிதியாண்டில் ரூ.2,285 கோடி செலவிடப்படும்’ என தெரிவித்தார். விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையிலான பாதையை மேம்படுத்தும் பணிகள் 80 சதவீதம் முடிந்து விட்டதாக கூறிய மந்திரி இதற்காக ரூ.441 கோடி இதுவரை செலவிடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் வருகிற அக்டோபருக்குள் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இந்த ஆண்டின் குளிர்கால கூட்டத்தொடரை புதிய கட்டிடத்தில் நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story