எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் 2026-ம் ஆண்டுவரை நீட்டிப்பு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்


எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் 2026-ம் ஆண்டுவரை நீட்டிப்பு - மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x
தினத்தந்தி 22 March 2022 2:17 AM IST (Updated: 22 March 2022 2:17 AM IST)
t-max-icont-min-icon

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை தொடர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளிதுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதற்கு ரூ.15 ஆயிரத்து 471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், முதல்முறையாக 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 5-வது கட்டமாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. 

இந்த கட்டத்தில், 2030-ம் ஆண்டுக்குள் எய்ட்சை உருவாக்கும் எச்.ஐ.வி. வைரசுக்கு முடிவு கட்டும் ஐ.நா.வின் இலக்கை நிறைவேற்ற இந்தியா பாடுபடும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 27 கோடி எச்.ஐ.வி. பரிசோதனைகள் மேற்கொள்ளவும், ஆண்டுக்கு 8 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story