பெங்களூரு: பி.டி.ஏ. அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை அதிரடி சோதனை..!


பெங்களூரு: பி.டி.ஏ. அதிகாரிகள் வீடுகளில் ஊழல் தடுப்பு படை அதிரடி சோதனை..!
x
தினத்தந்தி 22 March 2022 11:19 AM IST (Updated: 22 March 2022 11:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் இடைதரகர்கள் வீடுகளில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு. 

பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் (பி.டி.ஏ) நிலங்களை கையகப்படுத்துவது, பயனாளிகளுக்கு வீடு வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. 

இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வயாலிகாவலில் உள்ள பி.டி.ஏ. தலைமை அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையின் போது ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் பி.டி.ஏ. அதிகாரிகள் 9 பேர் மற்றும் 4 இடைத்தரகர்கள் வீடுகளில் இன்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சில சொத்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்கள், நகைகள், ரொக்கத்தை ஆகியவற்றை ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story