பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது ஏன்? தேசியவாத காங்கிரஸ் கேள்வி
இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 4½ மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.
மும்பை,
இந்தியாவில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 4½ மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் லிட்டருக்கு 80 பைசாவும், கியாஸ் சிலிண்டர் ரூ.50-யும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து உள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபாசே கூறுகையில், " ஒரு பக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக அவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் மறுபுறம் மிகப்பெரிய தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்குகின்றனர்.
நீங்கள் (மத்திய அரசு) ஏற்கனவே மிகப்பெரிய தள்ளுபடி விலையில் லட்சக்கணக்கான கச்சா எண்ணெய் பேரல்களை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்துவிட்ட நிலையில், இந்த நேரத்தில் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டிய தேவை என்ன? " என கேள்வி எழுப்பி உள்ளார்.
Related Tags :
Next Story