உக்ரைன் விவகாரம்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி பேச்சு
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக இன்று பேசினார்.
புதுடெல்லி,
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். இந்த உரையாடலின் போது இரு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும்,
போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவதையும் பிரதமர் மோடி, சுட்டிக்காட்டினார்.
அதேபோல், இருநாடுகளின் பரஸ்பர நலன்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்தியாவுக்கு உங்களை விரைவில் வரவேற்க ஆர்வமாக உள்ளதாகவும் போரிஸ் ஜான்சனிடம் பிரதமர் மோடி கூறினார்.
கடந்த ஆண்டு மெய்நிகர் முறையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ள்ளப்பட்ட ‘இந்தியா - இங்கிலாந்து செயல்திட்டம் 2030” செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் பிரதமர் மோடி பாராட்டினார். மேற்கூறிய தகவல்களை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story