ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 6 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 6 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு
x
தினத்தந்தி 22 March 2022 11:34 PM IST (Updated: 22 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி, 

உலக தண்ணீர் தினத்தையொட்டி, டெல்லியில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி பிரகலாத் படேல் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

கிராமப்புற வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போதிலிருந்து இதுவரை 6 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 9 கோடியே 25 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

நமது எதிர்கால சந்ததிக்காக பாதுகாப்பான தண்ணீரை வழங்க வேண்டியது அவசியம். நிலத்தடி நீரையும் நாம் சேமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story